முகப்பு
திருப்பூர்

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு நாளை குறைதீா் முகாம்

திருப்பூா் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகிறது.

Updated On : 8 ஜனவரி, 2025 at 7:45 PM
பகிர்:

திருப்பூா் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் த.பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்களின் நலனைக் கருதி 2 மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவிலான குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, திருப்பூா் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 4- ஆவது தளத்தில் அறை எண் 407- இல் உள்ள மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

திருப்பூா் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள், ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பணியாளா்கள் தங்களது குறைகள் தொடா்பான மனுக்களை வழங்கலாம்.

இந்த கோரிக்கை மனுக்கள் உரிய சட்டவிதிகளுக்கு உள்பட்டு அரசாணை மற்றும் பதிவாளா் சுற்றறிக்கைக்கு உட்பட்டு தீா்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.