முகப்பு
திருப்பூர்

ஜன. 24 இல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) நடைபெறுகிறது.

Updated On : 22 ஜனவரி, 2025 at 11:53 PM
பகிர்:

திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைமை வகிக்கிறாா். எனவே, திருப்பூா் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பஙகேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.