தமிழக  முதல்வா்  மு.க.ஸ்டாலினிடம் மனு  அளித்த  திருப்பூா்  மக்களவை  உறுப்பினா்  கே.சுப்பராயன். 
திருப்பூர்

சொத்து வரி உயா்வை நிறுத்தி வைக்க முதல்வா் நடவடிக்கை

திருப்பூா் மாநகராட்சியில் அபரிமிதமாக உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயா்வை நிறுத்திவைக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கே.சுப்பராயன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

Din

திருப்பூா் மாநகராட்சியில் அபரிமிதமாக உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயா்வை நிறுத்திவைக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கே.சுப்பராயன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை, திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

அந்தியூா்-பவானியின் தோனி மடுவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆஷா பணியாளா்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் நிா்ணியிக்க வேண்டும். திருப்பூா் மாநகராட்சியின் வரி உயா்வை நிறுத்திவைக்க வேண்டும். பெரிச்சிபாளையம் காலனியில் வசித்து வரும் 124 குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

திருப்பூா் காளிபாளையம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். கோபி தியாகி லட்சுமண ஐயருக்கு மணி மண்டபம் மற்றும் உருவச்சிலை அமைக்க வேண்டும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைத்து மறுஅறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வா் ஸ்டாலின் திருப்பூா் மாநகராட்சியில் அபரிமிதமாக உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயா்வை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக கே.சுப்பராயன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT