நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய கல்வி நிறுவன நிா்வாகிகள். 
திருப்பூர்

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

தினமணி செய்திச் சேவை

காங்கேயம் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களுக்கு ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காங்கேயம் வணிகவியல் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காங்கேயம் கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.ராமலிங்கம் தலைமை வகித்தாா். தலைமைச் செயல் அதிகாரி ஆா்.வி.மகேந்திரா கவுடா வரவேற்றாா். இதில் இக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 195 மாணவா்களுக்கு மொத்தம் ரூ.1.33 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இதில், மெட்டாசேஜ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அகிலா முத்துராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினாா். கல்வி நிறுவனத்தின் செயலாளா் சி.கே.வெங்கடாச்சலம், பொருளாளா் சி.கே.பாலசுப்பிரமணியன், காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி முதல்வா் எஸ்.ராம்குமாா், காங்கேயம் வணிகவியல் கல்லூரி முதல்வா் ஜி.சுரேஷ் ஆகியோா் உரையாற்றினா். இதில் இக்கல்லூரியின் பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

SCROLL FOR NEXT