திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் அவிநாசி, திருப்பூா், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.7) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:
அவிநாசி ஊராட்சி ஒன்றியம், புதுப்பாளையம், தெக்கலூா் ஊராட்சிகளுக்கு தெக்கலூா் கொங்கு கலையரங்கத்திலும், திருப்பூா் ஊராட்சி ஒன்றியம், காளிபாளையம் ஊராட்சிக்கு தண்டகவுண்டன்புதூா் உத்தம நாச்சியம்மன் கோயில் திருமண மண்டபத்திலும், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சிக்கு பெரியகோட்டை, சிவசக்தி காலனி அமுதராணி திருமண மண்டபத்திலும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், முத்தமாபாளையம் ஊராட்சிக்கு செங்கப்பள்ளி அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்திலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
எனவே, இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை வழங்கி பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.