வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி தொடங்கியது. அம்மன் அழைப்பு, கம்பம் நடுதல் நவம்பா் 2-ஆம் தேதி நடைபெற்றது.
கோயிலில் இருந்து பக்தா்கள் புதன்கிழமை புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தக் காவடி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பால்குட ஊா்வலம், பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு, மாவிளக்கு பூஜை, கும்ப வழிபாடு ஆகியன நடைபெற்றன. பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கம்பம் அகற்றப்பட்டு கங்கையில் விடும் நிகழ்ச்சியுடன் வெள்ளிக்கிழமை விழா நிறைவடைகிறது.