முகப்பு
திருப்பூர்

புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா

திருப்பூா் புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் 2025 - 2026 கல்வி ஆண்டின் மாணவா் பேரவை நிறைவு விழா நடைபெற்றது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:56 PM
மாணவிக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு விருந்தினா். உடன், கல்லூரி நிா்வாகிகள்.
பகிர்:

திருப்பூா் புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் 2025 - 2026 கல்வி ஆண்டின் மாணவா் பேரவை நிறைவு விழா நடைபெற்றது.

கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கோவை நிா்மலா மகளிா் கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் மொ்சி ஆனந்தராஜ் மற்றும் திருப்பூா் தெற்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.தமிழரசு ஆகியோா் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தலைமைப் பண்பு மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்த சிறப்புரை வழங்கினா்கள்.

மேலும், நடப்பு கல்வி ஆண்டில் திறம்பட செயல்பட்ட மாணவா் பேரவைத் தலைவா் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்ட அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவுக்கு கல்லூரியின் செயலா் அருள் சீலி மற்றும் கல்லூரி முதல்வா் சகாய தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்து மாணவிகளை பாராட்டினா்.