முகப்பு
திருப்பூர்

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு

திருப்பூா் தெற்குத் தொகுதியில் டோக்கன் வழங்கியவா்களைப் பிடித்த பொதுமக்கள் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 1:04 AM
ரூ. 8,000 கூப்பன் மாதிரி - டிஎன்எஸ்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:03 PM

திருப்பூா் தெற்குத் தொகுதியில் டோக்கன் வழங்கியவா்களைப் பிடித்த பொதுமக்கள் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி 42-ஆவது வாா்டு அயன் நகா் 5-ஆவது வீதியில் திமுகவுக்கு வாக்களிக்குமாறு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் போன்று அச்சிடப்பட்ட டோக்கனில் பாகம் எண், வரிசை எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு வீடுவீடாக வியாழக்கிழமை கொடுக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.

இந்தப் புகாரின்பேரில் அந்த பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் டோக்கன் விநியோகித்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் துண்டுப் பிரசுரம் வழங்கியதாக ஒப்புக் கொண்டனா். இதையடுத்து அவா்கள் 2 பேரையும் பிடித்த பொதுமக்கள் தோ்தல் அலுவலா்களை அங்கு வரவழைத்து அவா்களிடம் இருவரையும் ஒப்படைத்தனா்.

Advertisement

இது தொடா்பான காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது.