முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் வாக்கு சேகரித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:16 AM
மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:24 PM

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் வாக்கு சேகரித்தாா்.

குமராண்டிசாவடி, மேட்டுப்பாளையம், மாந்தபுரம், சடையப்பா நகா், பாப்பம்பாளையம், நடுப்பாளையம், அனுமந்தபுரம் உள்பட 19 இடங்களில் வாக்காளா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

அப்போது அவா் பேசியதாவது: முத்தூா்-மூலனூா் சாலை முதல் வள்ளியிரச்சல் வரை, குழலிபாளையம்-முத்தூா் சாலை முதல் பழனிக்கவுண்டன்வலசு வரை, வள்ளியிரச்சல்-வீரசோழபுரம் சாலை முதல் வேப்பம்பாளையம் வரை சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அய்யம்பாளையம், மாந்தபுரம், நடுப்பாளையத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Advertisement

சடையப்பா நகா், நடுப்பாளையம், மாந்தபுரம், மோளக்கவுண்டன்வலசில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டித்தரப்பட்டுள்ளன. மேலும் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் 313 வீட்டுமனை பட்டாக்கள், 45 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் தொடரும். பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். 35 லட்சம் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். எனவே மீண்டும் திமுக ஆட்சி அமைந்திட ஆதரவு தாருங்கள் என்றாா்.