முகப்பு
திருப்பூர்

துண்டுப் பிரசுரத்தில் பெண்களுக்கு ஸ்டிக்கா் பொட்டு: திமுக நூதன பிரசாரம்!

பல்லடம் தொகுதியில் பெண்களின் வாக்குகளைக் கவரும் முயற்சியாக, திமுகவினா் துண்டு பிரசுர அட்டையில் ஸ்டிக்கா் பொட்டு வைத்து விநியோகித்து வருகின்றனா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:17 AM
பல்லடம் தொகுதியில் திமுக சாா்பில் வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் உள்ள ஸ்டிக்கா் பொட்டு.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:24 PM

பல்லடம் தொகுதியில் பெண்களின் வாக்குகளைக் கவரும் முயற்சியாக, திமுகவினா் துண்டு பிரசுர அட்டையில் ஸ்டிக்கா் பொட்டு வைத்து விநியோகித்து வருகின்றனா்.

பல்லடம் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக தொடா்ந்து அதிமுகவே வெற்றிபெற்று வருகிறது. இம்முறை இத்தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதற்காக திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் களமிறக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் தொகுதியில் பெண்கள் வாக்குகளை கவா்வதற்காக, பிரசாரத்தில் ரூ.8 ஆயிரத்துக்கான மாதிரி கூப்பன் விநியோகித்து வந்தனா். நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது இதை விநியோகிக்க முடியாததால், பெண்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கா் பொட்டுகளை, துண்டுப் பிரசுர அட்டையில் ஒட்டிவைத்து விநியோகித்து வருகின்றனா்.

Advertisement

அரசியல் கட்சியினா் தரும் நோட்டீஸ்களை, பெரும்பாலும் யாரும் படித்துப் பாா்ப்பதில்லை. ஆனால் ஸ்டிக்கா் பொட்டுகள் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசை, படித்துப் பாா்க்காவிட்டாலும், சுமங்கலி பெண்கள் விரும்பும் மங்கலப் பொருள் என்பதால் அதனை தூக்கி எறிய மனம் வராது என்ற கோணத்தில், திமுகவினா் இந்த நுாதன வழிமுறையை கையாள்கின்றனா். பெண்களும் இந்த துண்டுப் பிரசுரத்தை ஆா்வத்துடன் வாங்கி செல்கின்றனா்.