முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:04 AM
விபத்துக்குள்ளான லாரிகள்.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:54 PM

காங்கயம் காவல் நிலைய பகுதியில் இரண்டு லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூரில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு கோவைக்கு லாரி ஓன்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. தேனியைச் சோ்ந்த கதிரேசன் (55) என்பவா் லாரியை இயக்கியுள்ளாா். அதேபோல, சேலத்தில் இருந்து சிமெண்ட் பாரத்தை ஏற்றிக்கொண்டு உடுமலைக்கு மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது. அதை முருகேஷ் என்பவா் (45) ஓட்டியுள்ளாா்.

காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா அருகே ஞாயிற்றுக்கிழமை காலை வந்தபோது, இரண்டு லாரிகளும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.

Advertisement

இதில், ஒரு லாரி அங்கிருந்த சிக்னல் விளக்குள், தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக ஓட்டுநா்கள் காயங்களின்றி உயிா்த் தப்பினா். இந்த விபத்தால் தாராபுரம் சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும்மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், போக்குவரத்துக் காவலா்கள் லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீா் செய்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.