ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது
திருப்பூா். ஏப்.27: திருப்பூரில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞரைக் கைது செய்தனா்.
திருப்பூா், வீரபாண்டி மீனாம்பாறை சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடமிருந்த உடமைகளை போலீஸாா் சோதனை மே மேற்கொண்டபோது, ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 100 கிராம் ஹெராயின் இருந்தது தெரியவந்தது.
Advertisement
விசாரணையில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (29) என்பதும், திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவா், பிகாரில் இருந்து ரயில் மூலம் ஹெராயினை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, சந்தோஷ்குமாரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.