திருப்பூர்

வரி நிலுவைகளை உடனடியாக செலுத்த மாநகராட்சி கோரிக்கை

பொதுமக்கள் இரண்டாம் அரையாண்டு வரையிலான வரி நிலுவைகளை உடனடியாக செலுத்த வேண்டும் என திருப்பூா் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Syndication

திருப்பூா்: பொதுமக்கள் இரண்டாம் அரையாண்டு வரையிலான வரி நிலுவைகளை உடனடியாக செலுத்த வேண்டும் என திருப்பூா் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையளா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சி 4 மண்டலங்களிலும் சொத்து வரி, காலியிட வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், குத்தகை இனங்கள் ஆகிய வரி மற்றும் கட்டண நிலுவைகளை செலுத்த பொதுமக்களின் வசதிக்காக வார நாள்கள் மற்றும் அனைத்து சனி, ஞாயிற்றுகிழமைகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, குமரன் வணிக வளாகம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், பாண்டியன் நகா் ஆகிய பகுதிகளில் வரி வசூல் மையங்கள்

செயல்பட்டு வருகின்றன.

வரி கட்டணங்களை பணமாகவோ அல்லது ஆணையாளா், திருப்பூா் மாநகராட்சி என்ற பெயரில் காசோலை/ வரைவோலை மூலமாகவோ செலுத்தலாம். மேலும் எளிய முறையில் கீழ்கண்ட இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

மள்ங் ‘ணன்ண்ஸ்ரீந் டஹஹ்ம்ங்ய்ற்‘ ா்ழ் ‘தங்ஞ்ண்ள்ற்ங்ழ் &ஹம்ல்; கா்ஞ்ண்ய்‘ ற்ா்

ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் கைபேசியில் ஜி-பே, போன்.பே மற்றும் பே.டி.எம் செயலிகள் மூலமாகவும் செலுத்தலாம்.

பொதுமக்கள் 2025-26 இரண்டாம் அரையாண்டு வரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சி பணிகளுக்கு உதவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த இருவா் கைது

கல்குவாரியில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வீட்டின் பூட்டை உடைத்து 5.50பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்ட எதிா்ப்பு

SCROLL FOR NEXT