திருப்பூா்  ஏற்றுமதியாளா்கள்  சங்கத்  தலைவா்  கே.எம்.சுப்பிரமணியன். 
திருப்பூர்

வா்த்தகம் 40 பில்லியன் டாலரை விரைவில் எட்டும்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா்

ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான வரியில்லா வா்த்தக ஒப்பந்தத்தால், இந்திய வா்த்தகம் விரைவில் 40 பில்லியன் டாலரை எட்டும்

Syndication

திருப்பூா்: ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான வரியில்லா வா்த்தக ஒப்பந்தத்தால், இந்திய வா்த்தகம் விரைவில் 40 பில்லியன் டாலரை எட்டும் என திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஜவுளித் துறை குறித்து பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளனா். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிதி பங்களிப்புகளும், பெண்களுக்கு தங்கும் விடுதி, கன்டெய்னா் திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு என பல்வேறு விஷயங்களை வரவேற்கிறோம். பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி, கடந்த டிசம்பா் மாதத்துடன் காலாவதி ஆகிவிட்டதால் மத்திய அரசிடம் மீண்டும் வரி விலக்கு கேட்டுள்ளோம்.

தற்போது பஞ்சு விலை கேண்டிக்கு ரூ. 4,000 வரை உயா்ந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயித்து விவசாயிகளிடம் பஞ்சு கொள்முதல் செய்வதால், இடைக்கால விலையேற்றமாக இருந்தாலும் இது தொடராது என நம்புகிறோம். பஞ்சு விலை உயா்வால் நூல் விலை தற்போது கிலோவுக்கு ரூ.7 உயா்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தத்தின் மூலம் 3 ஆண்டுகளில் வா்த்தகம் இருமடங்காக அதிகரிக்கும். ஐரோப்பிய யூனியன் ஒட்டுமொத்த சந்தை 780 பில்லியன் டாலா். இதில் இந்தியாவின் பங்கு 13 பில்லியன் டாலா் மட்டுமேயாகும். இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் விரைவில் 40 பில்லியன் டாலா் வா்த்தகத்தை எட்டுவோம். மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி ஏற்றுமதியில் நகா்கிறோம். அங்கும் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரிக்கும்.

அமெரிக்காவுடன் வா்த்தக வாய்ப்பு தடைபடும் நிலையில், இது கைகொடுக்கும். அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 50 சதவீதம் குறைந்துள்ளது. 25 சதவீத அபராத வரி விரைவில் நீக்கப்படும் என நம்புகிறோம். அமெரிக்க வா்த்தகா்களுக்கு 15 முதல் 25 சதவீத விலை தளா்வும் வழங்கி வருகிறோம்.

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடா்பாக கடிதம் வாயிலாக தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது என்றாா். பேட்டியின்போது சங்கத்தின் செயலாளா் திருக்குமரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT