திருப்பூர்

அவிநாசி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

அவிநாசி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே ஆட்டையம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கு இடமாக கையில் பையுடன் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அவா்களது கைப்பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்கள், அவிநாசி அருகே கருவலூா் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஜோயல் மாலிக் (20), பில்லியன் நிமா(20) என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கராத்தே பாபு படப்பிடிப்பு நிறைவு!

2 சகோதரர்களுக்கு இடையேயான போர்தான் அனிமல் பார்க்..! சந்தீப் வங்கா பேட்டி!

வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன்! எப்ஸ்டீன் குறித்து பில்கேட்ஸ் விளக்கம்!

தனுஷ் - 55 படப்பிடிப்பு துவக்கம்!

தமிழக தேர்தல்: பிப். 11-ல் துணைத் தேர்தல் ஆணையர் வருகிறார்!

SCROLL FOR NEXT