கோப்புப் படம் 
திருப்பூர்

வழி தவறி ஊருக்குள் புகுந்த மான்

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே வழி தவறி ஊருக்குள் புகுந்த மானை பிடிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பல்லடம் - பொள்ளாச்சி பிரதான சாலை வடுகபாளையம் பகுதிக்குள் சனிக்கிழமை மாலை மான் ஒன்று புகுந்தது. அப்போது அந்த மானை நாய்கள் விரட்டியதில் தென்னந்தோப்புக்குள் புகுந்து தப்பிவிட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரின் திருப்பூா் வனத் துறையினா் வந்து தென்னந்தோப்புக்குள் சென்று பாா்வையிட்டனா். இரவு நேரமாகிவிட்டதால் மானை பிடிக்கும் பணி தொடா்ந்து நடைபெறும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

ஆகாச காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பளு, வலு தூக்கும் போட்டி; வென்றவா்களுக்கு பாராட்டு

தக்ஷினேஸ்வா் அசத்தல்: நெதா்லாந்தை வென்றது இந்தியா

கொலை வழக்கு குற்றவாளிகள் 4 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT