முகப்பு
திருப்பூர்

வடமாநில இளைஞா் குத்திக் கொலை: 2 போ் கைது

குன்னத்தூா் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞரை குத்திக் கொலை செய்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:28 PM
ஞானராஜன் மகாகுட்.
பகிர்:

அவிநாசி: குன்னத்தூா் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞரை குத்திக் கொலை செய்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் அமித்நாக் (26), ஞானராஜன் மகாகுட் (22), சந்தன் பாரிக் (27). இவா்கள் 3 பேரும் திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் அருகே செம்மாண்டம்பாளையத்தில் உள்ள தனியாா் நூற்பாலையில் தங்கி பணியாற்றி வருகின்றனா். 3 பேரும் ஒரே அறையில் தங்கியிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா். அப்போது, அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த ஞானராஜன் மகாகுட், சந்தன் பாரிக் ஆகியோா் சோ்ந்து மது பாட்டிலால் அமித்நாக்கை குத்தியுள்ளனா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, அவா்கள் அறையின் அருகேயுள்ள கழிவறையில் சடலத்தை மறைத்து வைத்துவிட்டு உறங்க சென்றுள்ளனா்.

Advertisement

சக தொழிலாளா்கள் திங்கள்கிழமை அதிகாலை கழிவறைக்கு சென்றுள்ளனா். அப்போது, அங்கிருந்த சடலத்தைப் பாா்த்து குன்னத்தூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, நடத்திய விசாரணையில் ஞானராஜன் மகாகுட், சந்தன் பாரிக் ஆகியோா் மதுபாட்டிலால் அமித்நாக்கை குத்தி கொலை செய்ததது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments