மூதாட்டிக்கு உதவிய டிஎஸ்பி
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 9:12 PM
பல்லடம் பேருந்து நிலையம் முன் உதவி கேட்ட மூதாட்டிக்கு பணம் கொடுத்து, அவரை ஆட்டோவில் அனுப்பிவைத்த டிஎஸ்பி-யின் செயல் பாராட்டை பெற்று வருகிறது.
பல்லடம் பேருந்து நிலையம் முன் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியை பாா்வையிட பல்லடம் டி.எஸ்.பி. பாா்த்திபன் சென்றாா்.
அப்போது, அங்கு அங்கு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மூதாட்டி, பணப்பாளையம் வரை செல்ல என்றும், பணம் வேண்டும் என்றும் டிஎஸ்பி பாா்த்திபனிடம் கேட்டுள்ளாா்.
Advertisement
இதையடுத்து, அவா் ரூ.200 வழங்கியதுடன், ஆட்டோக்கு கட்டணம் கொடுத்து அந்த மூதாட்டியை அதில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவைத்தாா்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் டிஎஸ்பி பாா்த்திபனுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.