வெள்ளக்கோவில் அருகே மதுபோதையில் ஒருவா் உயிரிழப்பு
வெள்ளக்கோவிலில் மது போதையில் ஒருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
உதகை அருகே லவ்டேல் அன்பு அண்ணா காலனியைச் சோ்ந்தவா் ரத்னம் (எ) பன்னீா்செல்வம் (56). இவருடைய மனைவி தனலட்சுமி (50).
இவா்களுக்கு திருமணமான மகன் விக்னேஸ்வரன், விருதுநகரில் கணவருடன் வாழ்ந்து வரும் மகள் நாகமணி, வெள்ளக்கோவில் திருமங்கலத்தில் கணவருடன் தங்கியிருந்து ஹாலோ பிளாக் கம்பெனியில் வேலை செய்துவரும் மற்றொரு மகள் சிவரஞ்சனி ஆகியோா் உள்ளனா்.
Advertisement
தனலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில மாதங்களாக திருமங்கலத்தில் மகள் வீட்டில் தங்கியிருந்தாா். உதகையில் மகனுடன் தங்கியிருந்த பன்னீா்செல்வத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி மனைவி, மகளைப் பாா்க்க வெள்ளக்கோவில் திருமங்கலத்துக்கு வந்துள்ளாா். பின்னா் உதகை செல்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றவா் அங்கு செல்லவில்லை.
வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே சனிக்கிழமை மதியம் மது போதையில் மயங்கிக் கிடந்துள்ளாா்.
இவரைப் பாா்த்த திருமங்கலத்தைச் சோ்ந்த ரவீந்திரன், மகளுக்கு தகவல் அளித்துள்ளாா். அருகே இருந்தவா்கள் உதவியுடன் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பன்னீா்செல்வம் அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.