முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 4:46 AM
நீதிமன்றம்
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 10:26 PM

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத முகவரியில் இருந்து வந்த செய்தியில், திருப்பூா் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில், மைதானம் மற்றும் கழிவறைகளில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா், 3 தளங்கள் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்தில் வெடிபொருள் செயல் இழப்பு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினா். இதில்வெடிகுண்டு கண்டறியப்படவில்லை.

எனவே, இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடா்பாக வீரபாண்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement