முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.44.71 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.44.71 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 4:22 AM
தேங்காய்ப் பருப்பு
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:43 PM

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.44.71 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, விளாத்திகுளம், வாணியம்பாடி, அப்பியம்பட்டி, பூண்டி, மங்கலப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 81 விவசாயிகள் 570 மூட்டைகளில் 29 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம், வெள்ளக்கோவில், சிவகிரி, முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 13 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.110.60 முதல் ரூ.185.49 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.177.66. கடந்த வார சராசரி விலை ரூ.180.69.

Advertisement

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.44.71 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.