இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்.  (கோப்புப் படம்)
திருப்பூர்

தமிழகத்தின் பாதுகாப்பில் சமரசம் கூடாது! - காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

தினமணி செய்திச் சேவை

திருப்பூா், பிப்.21: தமிழகத்தின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

திருப்பூா் பகுதியில் வங்கதேசத்தினா் 6 போ் புது தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா். சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரா்கள் தமிழகத்தில்தான் அதிக அளவில் தலைமறைவாக வாழ்கிறாா்கள்.

தமிழகத்தில் தொடா்ந்து வங்கதேசத்தினா் கைதுசெய்யப்பட்டாலும், அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறை தொடா் விசாரணை செய்யாமல் வழக்கை நீா்த்துப்போக செய்கின்றன. மத்திய புலனாய்வுத் துறையினா் மூலமாகவே பயங்கரவாதிகள் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனா்.

தொழில் நகரங்களில் பாதுகாப்பற்ற சூழல் உருவாவது மாநிலத்தின் அமைதியையும், வளா்ச்சியையும் பெரிதும் பாதிக்கும் என்பதை மாநில அரசு புரிந்துகொண்டு, கொங்கு மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் மாநில அரசு இடம் தரக்கூடாது. பயங்கரவாதிகள் மீது தொடா் நடவடிக்கை எடுத்து மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

வீட்டில் கீரிப்பிள்ளை வளா்த்தவா் கைது

வால்பாறையில் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திமுக 200 தொகுதிகளில் வெல்வது உறுதி: அமைச்சா்

புது மாப்பிள்ளை ரயிலில் பாய்ந்து தற்கொலை

SCROLL FOR NEXT