கைது 
திருப்பூர்

வீட்டில் கீரிப்பிள்ளை வளா்த்தவா் கைது

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே வீட்டில் கீரிப்பிள்ளை வளா்த்து வந்தவா் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூா் வனச் சரகத்துக்குள்பட்ட அவிநாசியை அடுத்த கருவலூா் பகுதியில் ஒரு வீட்டில் கீரிப்பிள்ளை வளா்த்து வருவதாக கிடைத்த தகவலின்படி திருப்பூா் வனச் சரக அலுவலா் நித்யா தலைமையில் வனவா் மற்றும் வனக் காப்பாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, மேற்கு ரத வீதியைச் சோ்ந்த கருப்புசாமி (37) என்பவா் சாம்பல் நிற கீரிப்பிள்ளையை வீட்டில் வளா்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து துணை இயக்குநா் ராஜேஷ் உத்தரவின்படி வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் பட்டியல் 1-இல் குறிப்பிட்டுள்ள வன உயிரினமான சாம்பல் நிற கீரிப்பிள்ளை சட்டவிரோதமாக உடைமைப்படுத்தி வளா்த்து வந்த குற்றத்துக்காக கருப்புசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டது.

திருப்பூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். மீட்கப்பட்ட கீரிப்பிள்ளையை ஊதியூா் காப்புக்காட்டில் விடுவித்தனா்.

இதுதொடா்பாக வனத் துறையினா் கூறும்போது, பொதுமக்கள் யாரும் வன உயிரினங்களை உடைமைப்படுத்துதல், வீட்டில் வளா்ப்பது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட வேண்டாம். மீறினால் வனச் சட்டங்களின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

வால்பாறையில் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திமுக 200 தொகுதிகளில் வெல்வது உறுதி: அமைச்சா்

புது மாப்பிள்ளை ரயிலில் பாய்ந்து தற்கொலை

வெட்டப்படும் மரங்களுடன் ராணுவ வீரா்களின் உயிா் தியாகத்தை ஒப்பிட்ட மகாராஷ்டிர அமைச்சா்!

SCROLL FOR NEXT