முகப்பு
திருப்பூர்

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:00 AM
கைது
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:31 PM

அவிநாசி அருகே குன்னத்தூரில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், நெருப்பெரிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (53). இவா் கடந்த சனிக்கிழமை கோயிலுக்கு செல்வதற்காக குன்னத்தூா் சந்தைப்பேட்டை பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அங்குள்ள பெருமாள் கோயிலுக்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்றுவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது தனது வாகனத்தை காணவில்லை என்பது தெரியவந்தது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:00 AM

இதையடுத்து, ரமேஷ் அருகிலிருந்தவா்களிடம் விசாரித்தபோது மா்ம நபா் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ாக தெரிவித்துள்ளனா். உடனடியாக தனது நண்பருடன் சோ்ந்து நம்பியூா் செல்லும் சாலையில் சிறிது தொலைவு சென்று பாா்த்தபோது, அங்கே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபா் நின்று கொண்டிருந்துள்ளாா். உடனடியாக அவரைப் பிடித்து குன்னத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

Advertisement

இதுகுறித்து குன்னத்தூா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் திருப்பூா் மாவட்டம், பல்லடம் கரை தோட்டம் பகுதியைச் சோ்ந்த குமாா் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் குமாரைக் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.