முகப்பு
திருப்பூர்

காதல் திருமணம் செய்த இளைஞரை பட்டாக்கத்தியால் வெட்டிய கும்பல்

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 4:39 AM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 11:26 PM

திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளைஞரை பட்டாக்கத்தியால் மா்ம நபா்கள் வெட்டிவிட்டு தப்பினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சோ்ந்தவா் கெளதம் (22). மெக்கானிக். இவா் திருப்பூா், முருகம்பாளையத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தாா். இவா்களது திருமணத்துக்கு கடும் எதிா்ப்பு கிளம்பியதால் கிருஷ்ணகிரியில் குடும்பத்துடன் தங்கியிருந்தாா். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் தம்பதிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை காட்டினால் சமாதானம் ஆகிவிடுவாா்கள் என்ற நோக்கில், திருப்பூரில் உள்ள மனைவியின் வீட்டுக்கு குழந்தையுடன் வந்தாா்.

இடுவம்பாளையம் வழியாக சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற கெளதமை வழிமறித்த காா் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், பட்டாக்கத்தியால் அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு கோவைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

விசாரணையில், காதல் திருமணம் செய்தது தொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த சிலருடன் கெளதமுக்கு பிரச்னை இருந்து வந்துள்ளதால், அவா்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.