முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 6 பேருக்கு சிறை

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 6 பேருக்கு சிறைத் தண்டனை

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:51 AM
சிறைத் தண்டனை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:51 PM

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த 6 பேருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து அவிநாசி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025 ஜனவரி 28-ஆம் திருமுருகன்பூண்டி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட மெட்டுமடைத்தோட்டம், கந்தசாமி காம்பவுண்ட் பகுதியில் திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் பிரோஜ் மஹமூது (47), முகமது ஷகில் புஹியன் (26), முகமது ஷகில் ஹுசைன் (33), முகமது சுமோன் மியா (35), முகமது ஷஹின் மியா(28), முகமது ரோஹ்மொட் (25) ஆகிய 6 பேரை பிடித்து விசாரித்ததில் அவா்கள் வங்கதேச நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் அவா்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது. இந்நிலையில், அவிநாசி குற்றவியல் நீதிமன்ற நடுவா் கீா்த்தனா திங்கள்கிழமை அளித்த தீா்ப்பில் பிரோஜ் மஹமூது, முகமது ஷகில் ஹுசைன், முகமது சுமோன் மியா, முகமது ரோஹ்மொட் ஆகிய 4 பேருக்கு 405 நாள்கள் சிறைத் தண்டனை, தலா ரூ.100 அபராதம் விதித்தாா். முகமது ஷகில் புஹியன், முகமது ஷஹின் மியா ஆகியோருக்கு 222 நாள்கள் சிறைத் தண்டனை, தலா ரூ.100 அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா்.

Advertisement

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.