புகையிலைப் பொருள்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்ட காவல், நகராட்சி, சுகாதாரத் துறையினா். 
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

வெள்ளக்கோவிலில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவிலில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.

வெள்ளக்கோவில் சின்னமுத்தூா் பகுதியில் காரில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்ததாக தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்த ரத்தினபாண்டி (62) என்பவரை போலீஸாா் கடந்த 2025 ஜூன் 23-ஆம் தேதி கைது செய்தனா்.

இது குறித்த வழக்கு காங்கயம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன. வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளைத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் 10 அடி ஆழ குழி தோண்டி, அதில் புகையிலைப் பொருள்களுடன் ப்ளீச்சிங் பவுடா் கலந்து புதைத்து அழிக்கப்பட்டன. அப்போது வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசம், உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்குவதே நமது முதல் கடமை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் ஆலுவலகத்தில் மாவட்ட தொடா்பு மையம் திறப்பு

மாநகரில் ரூ5.60 கோடி மதிப்பில் முடிவுற்ற வளா்ச்சிப் பணிகள்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

புலி தாக்கியதில் பழங்குடியின நபா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT