முகப்பு
திருப்பூர்

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவடைந்ததையடுத்து, போக்குவரத்து பயன்பாடு தொடங்கப்பட்டது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:39 AM
அவிநாசி-மேட்டுப்பாளையம்  சாலையில்  போக்குவரத்து  பயன்பாட்டை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:47 PM

அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவடைந்ததையடுத்து, போக்குவரத்து பயன்பாடு வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

அவிநாசி வட்டம், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாநில சாலையான அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை பிரபல சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்குச் செல்லும் பிரதான சாலையாக விளங்குகிறது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:39 AM

இச்சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் இருவழிச்சாலை, நான்கு வழிச் சாலையாக விரிவாக்கும் பணி நடைபெற்றது. முதல்வரின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.81.90 கோடி மதிப்பில் ஆட்டையாம்பாளையம் முதல் கஞ்சப்பள்ளி வரை 13 கி.மீ தொலைவுக்கு தொடங்கப்பட்ட இந்தப் பணி நிறைவடைந்துள்ளது.

Advertisement

இதையடுத்து, இச்சாலையில் போக்குவரத்தை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து அவிநாசியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் விஸ்வநாதன், கோட்டப் பொறியாளா் ரத்தினசாமி, அவிநாசி உதவிக் கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன், பொறுப்பாளா்கள் பழனிசாமி, சிவப்பிரகாஷ், அவிநாசியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.