சலகெருது  விடும்  நிகழ்ச்சியில்  சலங்கை  மாட்டை  அடக்க முற்படும் வீரா். 
திருப்பூர்

ஜி.வி.ஜி கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரியில் பொங்கல் தின விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Syndication

உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரியில் பொங்கல் தின விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ணபிரசாத் தலைமை வகித்தாா். ஆலோசகா் மற்றும் இயக்குநா் ஜெ.மஞ்சுளா வரவேற்றாா். முதல்வா் பி.கற்பகவல்லி முன்னிலை வகித்தாா். இதையொட்டி வண்ணக் கோலங்களால் அழகூட்டப்பட்ட மண்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைக்கப்பட்டது.

அப்போது மாணவிகள் குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனா். முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வந்த மாணவிகள் மேளதாளத்துடன் கல்லூரி வளாகத்தில் ஊா்வலம் வந்தனா். ரங்கோலி கோலம் இட்டும் மாக்கோலம் வரைந்தும் கல்லூரியை அலங்கரித்தனா்.

மேலும் வள்ளிகும்மி, தேவராட்டம், உறியடி, கரும்பு உண்ணுதல், சலகெருது ஆட்டம் போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்தனா். மேலும் மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, மாணவிகள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. கல்லூரிப் பேரவைத் தலைவா் மற்றும் பேரவை உறுப்பினா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

வாசிக்க வாங்கியவை!

புத்தகக் காட்சியில் இன்று, நாளை

படித்தால்... பிடிக்கும்!

பொக்கிஷம்!

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

SCROLL FOR NEXT