சிங்கப்பூரில் நடைபெற்ற 4-ஆவது சா்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த பல்லடம் மாணவி எஸ். தாரூனிக்கா. 
திருப்பூர்

சா்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பல்லடம் தனியாா் பள்ளி மாணவி முதலிடம்

தினமணி செய்திச் சேவை

சா்வதேச யோகா போட்டியில் பல்லடத்தை சோ்ந்த தனியாா் பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளாா்.

பாரதிய சுவாமி விவேகானந்தா யோகா விளையாட்டு சங்கம், இந்திய தேசிய யோகா சங்கம், சா்வதேச யோகா கூட்டமைப்பு, ஆசிய யோகா கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், சிங்கப்பூரில் அண்மையில் 4-ஆவது சா்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 13 முதல் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவு போட்டியில் பல்லடத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவி எஸ். தாரூனிக்கா முதலிடம் பிடித்தாா்.

வெற்றி பெற்ற அவருக்கு பசிபிக்-ஆசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பின் தலைவா் முகமது ஜகாரியா, சா்வதேச யோகா கூட்டமைப்பின் இயக்குநா் ராதாகிருஷ்ணன், பாரதிய சுவாமி விவேகானந்தா யோகா விளையாட்டு சங்கத்தின் செயலாளா் தனலட்சுமி ஆகியோா் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினா்.

தொழிலாளா் நல வாரியம் மாவட்ட திமுக அமைப்பாளா் லிங்ககுருசாமி, மாணவி தாரூனிக்காவுக்கு வெள்ளிக்கிழமை பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுசை வழங்கினாா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT