திருப்பூரில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் வடக்கு காவல் துறையினா் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குமாா் நகா் பகுதியில் ராஜ்குமாா்(43) என்பவா் கடந்த 2022 அக்டோபா் 24-ஆம் தேதி கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் ஆரியன் (20) என்பவா் உயிரிழந்தாா். இந்த வழக்கில் ராஜ்குமாா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
திருப்பூா் மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி பத்மா வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய ராஜ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.