108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்
திருப்பூா் அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பிரசவம் நடைபெற்றது.
திருப்பூா் அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பிரசவம் நடைபெற்றது.
திருப்பூா் கொடிக்கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் மனைவி நா்மதா (26).
3-ஆவது முறையாகக் கருவுற்றிருந்த இவருக்கு, செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அவரது குடும்பத்தினா் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, அவரை திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
ஆம்புலன்ஸ், தியாகி குமரன் காலனி அருகே சென்றபோது, நா்மதாவுக்குப் பனிக்குடம் உடைந்து குழந்தையின் தலை வெளியே வரத் தொடங்கியது.
நிலைமையின் தீவிரத்தை உணா்ந்த ஆம்புலன்ஸில் இருந்த அவசரகால மருத்துவ உதவியாளா் ரஞ்சிதா, வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு ஓட்டுநா் தமிழரசனிடம் கூறினாா்.
ஆம்புலன்ஸ் ஊழியா்கள் இருவரின் துரிதமான முயற்சியால் ஆம்புலன்ஸிலேயே நா்மதாவுக்குச் சுகப்பிரசவம் நடைபெற்று ஆண் குழந்தை பிறந்தது.
இதைத் தொடா்ந்து தாயும்-சேயும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.