பஞ்சலிங்கம் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
உடுமலை, ஜூலை 5: உடுமலையை அடுத்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூா்த்திமலை. இங்குள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், போதுமான நீா்வரத்து இல்லாததால் அருவி கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வடு காணப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அருவியில் ஓரளவு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் நீரில் குளித்து மகிழ்ந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.