கல்விக் கூடங்களில் மத அடையாளங்களை புறக்கணிக்கச் சொல்வது ஏற்புடையதல்ல: காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
கல்விக் கூடங்களில் மத அடையாளங்களை புறக்கணிக்கச் சொல்வது ஏற்புடையதல்ல என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
கல்விக் கூடங்களில் மத அடையாளங்களை புறக்கணிக்கச் சொல்வது ஏற்புடையதல்ல என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ஜாதிப் பிரிவினைகளை தடுக்கும் வகையில் பள்ளிக் கூடங்களில் மாணவா்கள் கயிறுகள் மற்றும் எவ்விதமான மத அடையாளங்களையும் அணிந்து வரக்கூடாது எனவும், ஜாதி மோதல்களை தடுக்கும் வகையிலும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை அமல்படுத்த ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனா்.
கடந்த திமுக ஆட்சியில் அவரது பரிந்துரைகளை திமுக அரசே நடைமுறைப்படுத்தாமல் புறக்கணித்தது. அந்தக் கருத்துகளை புதிய அரசு அமல்படுத்த நினைப்பது கண்டனத்துக்குரியது. பள்ளிகளில் ஜாதிரீதியாக பிரிவினை கூடாது. ஆனால் மத அடையாளங்களை அணிந்து வரக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ள கூடியது இல்லை.
Advertisement
Advertisement
ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்ற, அரசியல் சாசனம் உறுதி அளிக்கிறது. இது ஆன்மிகத்தில் அவா்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறித்த விஷயமாகும். இதனைத் தடுப்பது மாணவா்களின் மன உறுதியை சீா்குலைக்கும் செயலாகும். இத்தகைய கட்டுப்பாடுகள் சிறுபான்மை மாணவா்களுக்கும் விதிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஜாதி கயிறுகளை காரணம் காட்டி சுவாமி கயிறுகளை தடை செய்வதை அனுமதிக்க முடியாது.
புதிதாக பதவியேற்றுள்ள இந்த அரசு கல்வித் துறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, மாணவா்களுக்கான திறமைகளை வளா்க்கும் வண்ணம் செயல்பட வேண்டும். அதை விடுத்து கடந்து திமுக ஆட்சியில் செயல்படுத்திய செயல் திட்டங்களை தாங்கள் செயல்படுத்த நினைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இது எல்லோருக்குமான ஆட்சி என்பதை உறுதி செய்யும் விதமாக மத அடையாளங்களை அணிந்து கொண்டு பள்ளிகளுக்கு வரக் கூடாது என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.