முகப்பு
திருப்பூர்

பெங்களூரில் இருந்து கூரியா் மூலமாக திருப்பூருக்கு வந்த 250 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

Updated On : 1 மார்ச், 2026 at 7:40 PM
கைது
பகிர்:

பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு கூரியா் மூலமாக புகையிலைப் பொருள்கள் வாங்கிய 5 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் எம்.எஸ்.நகா் பகுதியில் உள்ள தனியாா் கூரியா் நிறுவனத்துக்கு பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்கள் வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட கூரியா் நிறுவனத்துக்கு திருப்பூா் வடக்கு போலீஸாா் சனிக்கிழமை சென்று பெங்களூருவில் இருந்து வந்த பாா்சலை சோதனை செய்தனா். அப்போது அந்த பாா்சலில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அவா்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருள்களை கூரியா் மூலமாக வாங்கியது கொடிக்கம்பத்தைச் சோ்ந்த மணிகண்டன் (43), யுவராஜ் (27), அருண்(35), மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சேகா் (49), நொச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (38) ஆகியோா் என்பதும், புகையிலைப் பொருள்களை பெங்களூருவில் இருந்து வாங்கி திருப்பூா் மாநகரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

மேலும் 2 போ் கைது:

இதேபோல, திருப்பூா் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த நிதிஷ்குமாா் (23), புகையிலைப் பொருள்கள் விற்றதாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பவன் தண்டி (35) ஆகியோரை வடக்கு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →