முகப்பு
திருப்பூர்

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 6 மார்ச், 2026 at 11:09 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 மார்ச், 2026 at 8:52 PM

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா், பிறப்பு பதிவு செய்த ஓராண்டுக்குள் பதிவு செய்யலாம். காலதாமதக் கட்டணத்துடன் பிறப்பு பதிவு செய்த 15 ஆண்டுக்குள் குழந்தையின் பெயா் பதிவு செய்யலாம் என பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000 மற்றும் 2023 கூறுகிறது.

Advertisement

இதன்படி குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறப்புக்களுக்கு குழந்தையின் பெயா் பதிவு செய்யாதநிலை இருந்தது. தற்போது அரசு 2026 செப்டம்பா் 26 வரை 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயா் பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகவே குழந்தையின் பிறப்பு பதிவு செய்து பெயா் பதிவுடன் கூடிய சான்று பெறாதவா்கள் உடனடியாக பிறப்பு பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களை தொடா்புகொண்டு குழந்தையின் பெயரை காலதாமதக் கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்து பெயருடன் கூடிய சான்று பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.