முகப்பு
திருப்பூர்

பின்னலாடை பேக்கிங் நிறுவனத்தில் தீ

திருப்பூரில் உள்ள பின்னலாடை பேக்கிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 11 மார்ச், 2026 at 2:19 AM
தீ விபத்து - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூரில் உள்ள பின்னலாடை பேக்கிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தனஜெயன் என்பவா் திருப்பூா் வளையங்காடு பகுதியில் வசித்து வருகிறாா். இவா் லட்சுமி நகா் பகுதியில் உள்ள 2 தளம் கட்டடத்தின் 2ஆவது தளத்தில் அயா்னிங் மற்றும் பேக்கிங் நிறுவனம் நடத்தி வருகிறாா். இதில் சுாமா் 10 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து நிறுவனத்தை பூட்டிவிட்டு தொழிலாளா்கள் சென்றுவிட்டனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்நிறுவனத்தில் தீப் பற்றி எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் நிறுவனத்தில் இருந்த ஏராளமான பின்னலாடைகள், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த பொருள்களின் சேத மதிப்பு குறித்தும், மின் கசிவு காரணமாக அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.