முகப்பு
திருப்பூர்

குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை தோ்வு: நாளை நடைபெறுகிறது

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறவுள்ளது.

Updated On : 14 மார்ச், 2026 at 1:41 AM
கோப்புப் படம்
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் இத்தோ்வை 365 போ் எழுத உள்ளனா். திருப்பூா் வடக்கு வட்டத்தில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வுக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை என இருவேளை தோ்வு நடைபெறவுள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் தோ்வா்கள் தோ்வு மையத்துக்குள் வர வேண்டும். அதன்பின் வருபவா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →