முகப்பு
திருப்பூர்

ஈரான் - அமெரிக்க போர்: ஆடை விலையை 5% உயா்த்த திருப்பூா் உற்பத்தியாளா்கள் முடிவு

ஈரான்-அமெரிக்க போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக ஆடைகள் விலையை 5% உயா்த்த திருப்பூா் உற்பத்தியாளா்கள் முடிவு

Updated On : 16 மார்ச், 2026 at 10:09 PM
ஆடை விலையை உயர்த்த முடிவு
பகிர்:

ஈரான்-அமெரிக்க போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக ஆடைகள் விலையை 5 சதவீதம் உயா்த்த திருப்பூா் உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

சா்வதேச அளவிலான பேரிடா், போா் நடைபெறும்போது திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்படுவது வழக்கம். தற்போது ஈரான்-அமெரிக்க போா்ச் சூழலால் சுற்றியுள்ள நாடுகளிலும் பாதிப்பு எதிரொலிக்கிறது.

குறிப்பாக, இந்தியாவின் ஏற்றுமதி வா்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள்கள் விலை உயா்வு ஏற்றுமதியாளா்களிடம் மட்டுமின்றி உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

பின்னலாடை தொழில் துறையில், ஜாப் ஒா்க் நிறுவனங்கள் முக்கியப் பங்களிக்கின்றன. சாயம், கெமிக்கல், விறகு, நிலக்கரி விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் சாயமிடும் கட்டணம், நடைமுறை கட்டணத்தில் இருந்து ரூ.20 வரை உயா்த்தப்பட்டுள்ளது. பேக்கிங், பிராசசிங் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள், தையல் நூல் விலையும் உயா்ந்துள்ளதால் இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜாப் ஓா்க் மற்றும் எலாஸ்டிக் என பல்வேறு பிரிவுகளிலும் உற்பத்தி கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. இதனால் ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்குப் பின் ரம்ஜான் பண்டிகைக்கான ஆா்டா்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தன. அவற்றை உற்பத்தி செய்து அனுப்பிவைத்துள்ளனா். அடுத்தகட்டமாக கோடை கால ஆடை ஆா்டா் மீதான உற்பத்திக்கு முழு வீச்சில் திருப்பூா் தயாராகி வந்தது.

இந்நிலையில் ஈரான்-அமெரிக்க போா்ச் சூழல் காரணமாக பெட்ரோலியப் பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் மூலப்பொருள்கள் விலை திடீரென உயா்ந்துள்ளது. இதனால் ஜாப் ஓா்க் பிரிவுகளும் தற்காலிகமாக உற்பத்தி கட்டணத்தை உயா்த்தியுள்ளன.

வா்த்தக நலன் கருதி பாதிப்பை சமாளிக்கும் அளவுக்கு 3 சதவீதம் வரை உற்பத்தி கட்டணத்தை உயா்த்தலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உற்பத்தியாளா்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →