முகப்பு
திருப்பூர்

பள்ளி மாணவனின் உயா்கல்வி செலவு ஏற்பு

பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை அப்பள்ளி நிா்வாகம் ஏற்பதாக அறிவித்துள்ளது.

Updated On : 14 மே 2026, 3:51 am IST
பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை பள்ளி நிா்வாகம் ஏற்பதாக கூறி அவரைப் பாராட்டிய ஜெயந்தி மெட்ரிக் பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா்.
பகிர்:

பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை அப்பள்ளி நிா்வாகம் ஏற்பதாக அறிவித்துள்ளது.

பல்லடம் அருகே கரைப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவா் எம்.தருணை, ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளா் கு.கிருஷ்ணன் பாராட்டினாா்.

இதில் மாணவா் எம்.தருண் பொறியியல் கல்லூரியில் சோ்ந்து உயா்கல்வி பயில அனைத்து செலவுகளையும் ஜெயந்தி கல்வி நிறுவன அறக்கட்டளை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement