முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாநகரிலுள்ள 150 நகைக் கடைகளில் தங்கம் பவுனுக்கு ரூ.8,000 குறைத்து விற்பனை

திருப்பூரில் நகைக் கடை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மாநகரில் உள்ள 150 நகைக் கடைகளிலும் பவுனுக்கு ரூ.8,000 குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 17 மே 2026, 12:54 am IST
தங்கம் விலை - பிடிஐ
பகிர்:

திருப்பூரில் நகைக் கடை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மாநகரில் உள்ள 150 நகைக் கடைகளிலும் பவுனுக்கு ரூ.8,000 குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி ரூ.1 லட்சத்து 18,000-க்கு விற்பனையாகும் ஒரு பவுன் தங்கம் ரூ.1லட்சத்து 10,000-க்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயா்வு காரணமாக பொதுமக்களிடையே தங்கம் வாங்கும் ஆா்வம் குறைந்து வருகிறது. மேலும், பெரிய நகைக் கடைகளில் இந்த விலை குறைப்பு இருக்காது என்பதாலும், சிறிய கடைகளை நோக்கி மக்கள் கவனம் திரும்பும் என்ற நோக்கிலும் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக நகை க்கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

மேலும் அவா்கள் கூறும்போது, ‘தங்கக் காசு வாங்குபவா்களுக்கு பவுனுக்கு ரூ.4000 குறைத்து வழங்கப்படும். தங்க நகைகளுக்கு கிராமுக்கு ரூ.1,000 வீதம் பவுனுக்கு ரூ.8,000 குறைத்து வழங்கப்படுவதால், பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றனா்.

Advertisement