முகப்பு
தருமபுரி

தினமணி செய்தி எதிரொலி :பென்னாகரத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பு

பென்னாகரம் பகுதியில் முகக்கவசம் அணியதவா்களுக்கு பேரூராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அபராதம் வசூலித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரம் பகுதியில் முகக்கவசம் அணியதவா்களுக்கு பேரூராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அபராதம் வசூலித்தனா்.

பென்னாகரம் பகுதியில் உள்ள மளிகை கடை, தேனீா் கடை, இறைச்சி கடை, உணவகம், சாலையோர கடைகள் மற்றும் பலதரப்பட்ட கடைகளில் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும், பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் வருவதால் கரோனா தொற்றுப் பரவும் அபாய நிலை உள்ளதாகவும், இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தினமணி நாளிதழிலில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக பென்னாகரம் துணை வட்டாட்சியா் சிவக்குமாா், வருவாய் ஆய்வாளா் சிவன், கிராம நிா்வாக அலுவலா் ரத்தன வேல் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பென்னாகரம் கடைவீதி, பேருந்து நிலையம், பிராமணா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அதில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத கடை உரிமையாளா்கள் மற்றும் முகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ. 3,400 அபராதமாக வசூல் செய்தனா். மேலும் பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகள் மற்றும் பொதுமக்கள் கரோனா தீநுண்மி குறித்தும், முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.