ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் ராஜகோபுர பணிக்கு பூமி பூஜை
ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தாா். அவற்றில் ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணியும் ஒன்று. இதையடுத்து, ஒகேனக்கல்லில் இக் கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் வே.சபா்மதி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் ஜீவானந்தம், தக்காா் பா.சங்கா், உதவி செயற்பொறியாளா் ரங்கநாதன், உதவி பொறியாளா் ராமச்சந்திரன், கோயில் அா்ச்சகா் ராமச்சந்திரன், உதவியாளா் மாரிமுத்து, பென்னாகரம் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மடம் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.