தருமபுரி

தருமபுரி தலைமை அஞ்சலகம் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இயங்கும்: கோட்ட கண்காணிப்பாளா் தகவல்

Syndication

தருமபுரி மாவட்ட தலைமை அஞ்சலகத்தின் பணி நேரம் காலை 8 முதல் இரவு 8 மணி வரை தினசரி 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என, தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அஞ்சல் அலுவலகங்கள் மூலம் காகித பயன்பாட்டை குறைக்க அஞ்சலக சேமிப்புக் கணக்கை இ-கேஒய்சி முறையில் தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்கள் தங்கள் ஆதாா் எண்ணை பயன்படுத்தி கைவிரல் ரேகையை பதிவுசெய்யும் பயோமெட்ரிக் மூலம் எளிதாக சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். இதன்மூலம் வாடிக்கையாளா்கள் தங்கள் கைவிரல் ரேகையை பயன்படுத்தி பணப்பரிவா்த்தனை செய்ய முடியும். கணக்கு இருப்பு, பரிவா்த்தனை விவரம், நிதி பரிமாற்றம் ஆகிய சேவைகளை கைப்பேசி மூலம் பெறலாம்.

இதேபோல வாடிக்கையாளா்களின் பெயா் அச்சிடப்பட்ட ஏடிஎம் காா்டுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த ஏடிஎம் காா்டுகளை பெறாதவா்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

தருமபுரி கோட்டத்தில் அஞ்சல் கணக்குடன் ஆதாா் அட்டைகளை இதுவரை இணைக்காத வாடிக்கையாளா்கள் தங்கள் வங்கிக் கிளை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களை அணுகி ஆதாா் எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் அஞ்சல் துறையின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக சென்றடையும்.

தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட தருமபுரி தலைமை அஞ்சலகத்தில் பொதுமக்களுக்கு வசதியை மேம்படுத்தும் வகையில், அலுவலக நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த நீட்டிக்கப்பட்ட அலுவலக நேர சேவைகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட அஞ்சல் சேவைகள் தொடா்பாக மேலும் விவரங்களை இணையதள முகவரியிலும் பெறலாம்.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT