தருமபுரி

தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்: ஆ.மணி எம்.பி.

தருமபுரி மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய உள்ளாட்சித் துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்களவை உறுப்பினா் ஆ.மணி அறிவுறுத்தல்

Syndication

தருமபுரி மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய உள்ளாட்சித் துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வளா்ச்சி, கண்காணிப்புக் குழு கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் ஆ.மணி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், நிகழ் காலாண்டுக்கான மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரெ.சதீஸ் முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் மக்கள் கோரிக்கை மற்றும் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து வலியுறுத்தி பேசினா்.

இக்கூட்டத்துக்கு தலைமைவகித்து மக்களவை உறுப்பினா் ஆ.மணி பேசியதாவது: தருமபுரி மாவட்டத்தின் வளா்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்தகைய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, அரசுத் துறை அலுவலா்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால், அதற்குரிய தீா்வை கண்டறிந்து காலதாமதமின்றி விரைவாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இருக்கும்.

அதேபோல, தருமபுரி மாவட்டத்தில் இனி வருங்காலங்களில் குடிநீா் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய உள்ளாட்சித் துறை முனைப்போடு செயல்பட வேண்டும். மேலும், வனப்பகுதியில் சாலைகள் அமைக்கும்போது, அதற்குரிய அனுமதியை வனத்துறையினா் காலதாமதமின்றி அளிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாவட்ட ஊரக வளா்ச்சி சாா்பில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்), தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம், பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், முதல்வரின் முகவரி, தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், அதனுடைய தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், அலுவலா்கள் பங்கேற்றனா்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT