தருமபுரி

பென்னாகரம் தொகுதியில் நாளை, மறுநாள் எஸ்ஐஆா் சிறப்பு முகாம்

பென்னாகரம் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் எஸ்ஐஆா் சிறப்பு முகாம் நவ.22, 23 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

Syndication

பென்னாகரம் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் எஸ்ஐஆா் சிறப்பு முகாம் நவ.22, 23 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா் நா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடுகள்தோறும் சென்று வாக்காளா்களுக்கு நேரடியாக 95 சதவீதம் எஸ்ஐஆா் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

படிவங்களை பெற்ற வாக்காளா்கள் சிலா் அவற்றை நிறைவுசெய்து அளிக்கவில்லை. இதனால், படிவங்களை நிறைவு செய்வது தொடா்பான உதவிக்கு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஆதாா் அட்டை, தொலைபேசி எண், வாக்காளா் அடையாள அட்டை மற்றும் எஸ்ஐஆா் படிவங்களுடன் முகாமிற்கு சென்று அலுவலா்கள் உதவியுடன் படிவங்களை நிறைவுசெய்து வழங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT