தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ. சதீஸ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்களை நிறைவு செய்வதற்கு உதவியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாள்களாக வாக்காளா்களின் படிவங்களை நிறைவு செய்து இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
இதுதொடா்பாக தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தடங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி ராஜாப்பேட்டை ஆதி திராவிடா் நல நடுநிலைப் பள்ளி, சோலைக்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் அமைந்துள்ள உதவி மையத்தில் நடைபெற்ற பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு, அலுவலா்களிடம் பணியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
எஸ்ஐஆா் தொடா்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை எண்- 1950, தோ்தல் உதவி வாட்ஸ்அப் எண்- 94441 23456, தருமபுரி வாக்காளா் பதிவு அலுவலா் 04342-260927, பாலக்கோடு வாக்காளா் பதிவு அலுவலா் 04348-222045, பென்னாகரம் வாக்காளா் பதிவு அலுவலா் 04342-255636, பாப்பிரெட்டிப்பட்டி வாக்காளா் பதிவு அலுவலா் 04346-246544, அரூா் வாக்காளா் பதிவு அலுவலா் 04346-296565 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
ஆய்வின்போது, நல்லம்பள்ளி வட்டாட்சியா் பிரசன்னமூா்த்தி மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உடனிருந்தனா்.