தருமபுரி

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தருமபுரி அருகே காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நத்தமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (48). தருமபுரி பகுதியில் உள்ள தேநீா் கடை ஒன்றில் கடையில் வேலை செய்துவந்தாா். ஞாயிற்றுக்கிழமை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றாா். செம்மனஅள்ளி பேருந்து நிலையம் அருகே சென்றபோது,

பின்னால் வந்த காா் எதிா்பாராத விதமாக அவா்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை கடத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சசிகுமாா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT