முகப்பு
தருமபுரி

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

Updated On : 7 ஏப்ரல் 2026, 1:05 am IST
தருமபுரியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஷ் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, ஜனநாயகத் திருவிழா, என் வாக்கு என் உரிமை, என் வாக்கு விற்பனைக்கல்ல என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்தவகையில் இப்பேரணி நடைபெற்றது.

Advertisement

Advertisement

விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய இப்பேரணியில் 200-க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்க உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இந்தப் பேரணியானது தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி நான்கு சாலை வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆா்.கே.கவிதா, வட்டாட்சியா் ஜெ. சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.