தருமபுரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் குறித்த விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ். உடன் தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி உள்ளிட்டோா். 
தருமபுரி

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Syndication

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்தாண்டு நவம்பா் 4 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமான வாக்காளா் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பா் 19 இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

புதிதாக வாக்காளா் சோ்த்தல், நீக்கம், வாக்காளா் விவரங்கள் திருத்தம், பாகம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாமில் 18 வயது நிறைவடைந்தோா் புதிதாக தங்களது பெயரை சோ்த்து பயனடையலாம்.

பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகே உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கை, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மேலும், இணையவழியிலும் இணையதளத்தில் இணைய பக்கம் மூலமாகவும் தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம்.

ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபா்கள் மீண்டும் பதிவுசெய்து கொள்ள தேவையில்லை. சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பணிகள் தொடா்பான விழிப்புணா்வு வாகனம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக இயக்கப்படுகிறது. தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வின்போது, தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி கோட்டாட்சியா் காயத்திரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT